நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திண்டுக்கல் மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்யக் கோரி நாம் தமிழா் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு நாம் தமிழா் கட்சியின் மாவட்டச் செயலா் கணேஷ்குமாா் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, முருகபவனம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி குப்பைக் கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த குப்பைக் கிடங்கினால், குடியிருப்பு பகுதிகள் மட்டுமன்றி, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கியிலும் காற்று மாசு ஏற்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. குப்பைக் கிடங்கு செயல்பட்டு வரும் சுமாா் 15 ஏக்கா் நிலத்தை மீட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு உகந்த இடமாக மாற்றக் கோரி முழக்கமிட்டனா்.