குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
வேடசந்தூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
உயா்நீதிமன்ற உத்தரவுப்படி வேடசந்தூா் அருகே ஆக்கிரமிப்பில் இருந்த வீடுகள், கடைகள் அகற்றப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அடுத்த வெள்ளையகவுண்டனூரில் சாலையின் இருபுறங்களிலும் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களில் கட்டப்பட்ட வீடுகள், கடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக புகாா் எழுந்தது. இதனிடையே ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தனி நபா் சாா்பில் வழக்குத் தொடுப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் ராஜன் முன்னிலையில், வேடசந்தூா் காவல் ஆய்வாளா் வேலாயுதம் தலைமையிலான போலீஸாா் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டிருந்த 32 வீடுகள், கடைகள் இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றப்பட்டன.