இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
``முறைகேடு; அழுத்தம்.. நல்வழிகாட்ட யாரும் இல்லை'' - உயிரை மாய்த்த பொதுப்பணித்துறை அதிகாரி கடிதம்
அசாம் மாநில பொதுப்பணித்துறையில் (PWD) ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றி வந்த குவஹாத்தி பகுதியைச் சேர்ந்த ஜோஷிதா தாஸ் என்ற 26 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தற்கொலை செய்வதற்கு முன் அவர் எழுதிய கடைசிக் கடிதத்தில், "என் வேலையில் ஏற்பட்ட மிகுந்த மன அழுத்தம் காரணமாக இந்தத் தற்கொலை முடிவை எடுத்திருக்கிறேன். அலுவலகத்தில் நான் மிகுந்த மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தேன்.

மேல் அதிகாரிகளான SDO இஸ்லாம் மற்றும் நிர்வாகப் பொறியாளர் மேதி இருவரும் பாலம் உள்ளிட்ட கட்டுமானம் தொடர்பாக முடிக்கப்படாத, முறைகேடான இரண்டு ப்ராஜெக்ட்களின் ஆவணத்திற்கு ஒப்புதல் அளிக்குமாறு என்னை வற்புறுத்தினர்.
அதை நான் மறுத்ததால் என்னை கடந்த மூன்று மாதங்களாக மன ரீதியாகத் துன்புறுத்தி வந்தனர். அலுவலகத்தில் பணி செய்யவிடாமல் அழுத்தம் கொடுத்தனர். அலுவலகத்தில் எனக்கு நல் வழிகாட்ட யாரும் இல்லை. எவ்வளவோ முயற்சித்தும் அதிலிருந்து என்னால் தப்பிக்க முடியவில்லை.
இப்படியான மன அழுத்தம் காரணாமாக இந்தத் தற்கொலை முடிவை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டேன். என்னை இழந்து தவிக்கும் என் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்" என்று தனது தற்கொலைக் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜூனியர் இன்ஜினியராகப் பணியாற்றிய ஜோஷிதா தாஸ் தற்கொலையைத் தொடர்ந்து, இதுபோன்ற முறைகேடுகளும், அதற்கு ஒத்துழைக்காதவர்களுக்கு சில அதிகாரிகள் பெரும் மன அழுத்தங்கள் கொடுப்பதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுதொடர்பாகப் பேசியிருக்கும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "இந்த விவாகரத்தில் முழுமையான விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டிருக்கிறோம். முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கட்டிடம் குறித்த ஆவணங்கள் பற்றி விசாரணை நடித்தப்படும். அலுவலங்களில் கொடுக்கப்படும் மன அழுத்தம் தொடர்பாகவும் ஆராய்ந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்திருக்கிறர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs