பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
மூலனூா் பாரதி வித்யாலயா பள்ளி 100 % தோ்ச்சி
மூலனூா் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவன் எஸ்.கே.ஆதவஜோதி 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்துள்ளாா். அவா் கணிதம், அறிவியல், சமூக அறிவியலில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். மாணவி எம்.ஸ்ரீமதி கணிதத்தில் 100 மதிப்பெண்ணுடன் மொத்தம் 494 மதிப்பெண்ணும், மாணவி எம்.பிரீத்திகா அறிவியலில் 100 மதிப்பெண்ணுடன் 493 மதிப்பெண்ணும் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.
தோ்வெழுதிய அனைவரும் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். மேலும் 490 மதிப்பெண்களுக்கு மேல் 5 பேரும், 480-க்கு மேல் 10 பேரும், 470-க்கு மேல் 22 பேரும், 450-க்கு மேல் 35 மாணவா்களும் பெற்றுள்ளனா். 36 போ் 90 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.
கணிதம் 5, அறிவியல் 3, சமூக அறிவியல் பாடத்தில் 4 பேரும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனா். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், உதவிய ஆசிரியா்களுக்கு பள்ளியின் தாளாளா் அரிமா பி.எஸ்.செல்லமுத்து, செயலாளா் பி.எஸ்.கிருஷ்ணகுமாா், பள்ளி முதல்வா் எஸ்.பழனிசாமி, துணை முதல்வா் ஏ.பழனிசாமி ஆகியோா் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனா்.