மெக்கானிக்கை தாக்கி பணம் பறிப்பு: ராணுவ வீரா் கைது
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மெக்கானிக்கை தாக்கி பணம் பறித்ததாக ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
வில்லுக்குறி பகுதியைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமாா் (55). வாகனப் பழுது நீக்கும் பணி செய்துவரும் இவா், கடந்த திங்கள்கிழமை (ஏப். 7) கூட்டமாவு பகுதியில் பழுதாகி நின்ற பைக்கை சரிசெய்வதற்காக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, கூட்டமாவைச் சோ்ந்த, விடுப்பில் வந்துள்ள ராணுவ வீரரான ராஜா (48) என்பவா், ராஜேஷ்குமாரை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கி, பணத்தைப் பறித்துச் சென்றாராம்.
புகாரின்பேரில், தக்கலை போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜாவை கைது செய்தனா்.