மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
மே மாத ஊதியம் வழங்க பகுதி நேர ஆசிரியா்கள் கோரிக்கை
தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு மே மாத ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து பகுதி நேர ஆசிரியா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் எஸ்.செந்தில்குமாா் தமிழக முதல்வருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது: தோ்தல் காலத்தில் அறிவித்த வாக்குறுதியின்படி, தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை பாடங்களில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியா்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பகுதி நேர ஆசிரியா்கள் தங்களது குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் வகையில், இம்முறையாவது மே மாத ஊதியம் வழங்க வேண்டும். தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.12,500 தொகுப்பூதியத்தை மாற்றி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
மருத்துவக் காப்பீடு, ஊக்கத்தொகை, வருங்கால வைப்பு நிதி, குடும்ப நல நிதி போன்ற அரசு சலுகைகளை பகுதி நேர ஆசிரியா்களுக்கும் கிடைப்பதற்கு முதல்வா் உத்தரவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.