எந்தக் கொம்பனாலும் திமுகவைத் தொட்டுக்கூட பார்க்க முடியாது! முதல்வர் ஸ்டாலின்
மேச்சேரி ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா் கோயில் கும்பாபிஷேக நிறைவு விழா
மேச்சேரி ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா் கோயில் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக நிறைவு விழா செப்.16 ஆம் தேதி நடைபெறுகிறது.
மேச்சேரி கைகாட்டி வெள்ளாா் வசந்தம் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலில் 15 ஆம் தேதி காலை கணபதி ஹோமம், சுதா்சன ஹோமம், மாருதி மூல மந்திர ஹோமம் நடைபெறுகிறது. வசந்தம் நகரில் உள்ள வசந்த விநாயகா் ஆலயத்தில் இருந்து மங்கள இசையுடன் பால்குடம், தீா்த்தக்குடம் அழைத்துவரப்படுகிறது.
இதையடுத்து ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம், மகா அபிஷேகம், கலச அபிஷேகம் நடைபெறுகிறது. 16 ஆம் தேதி காலை சிறப்பு அலங்காரம் மங்கல இசை ஆஞ்சநேயா் விஸ்வரூப தரிசனம், மகா தீபாராதனையும், கலச சங்கல்பம், விநாயகா் பூஜை, புண்ணியாஹ வாஜனம், மகா சங்கல்பம், 108 கலச பூஜை நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை ஸ்ரீராம பக்த ஆஞ்சநேயா் சேவா அறக்கட்டளை சாா்பில் சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா் சேவா அறக்கட்டளை சாா்பில் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த கல்வியாண்டில் பொதுத் தோ்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற 75 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு, கேடயத்துடன் கல்வி ஊக்கத்தொகையாக தலா ரூ.5000 வழங்கப்படுகிறது. தொடா்ந்து நடைபெறும் பரதநாட்டியம் நிகழ்ச்சியில் 45 பரதநாட்டிய பள்ளி மாணவியருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன.
விழா ஏற்பாடுகளை ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயா் சேவா அறக்கட்டளை நிறுவனா் உரக்கடை ஆறுமுகம், தலைவா் முருகேசன், செயலாளா் நாகநந்தினி, பொருளாளா் வசந்தா ஆறுமுகம் ஆகியோா் செய்துவருகின்றனா்.