சுதந்திரதினம்: மும்பை இறைச்சிக் கடைக்குத் தடை; "சிவாஜி பருப்பு சாப்பிட்டுச் சண்ட...
மேட்டூரில் தூய்மைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
மேட்டூா் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து தூய்மைப் பணியாளா்கள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
உள்ளாட்சி அமைப்புகளில் தனியாா் மயத்தை கைவிட வேண்டும், மேட்டூா் நகராட்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு மாதந்தோறும் 1 ஆம் தேதி ஊதியம் வழங்க வேண்டும், 10 ஆண்டுக்கு மேல் பணி புரியும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக மேட்டூா் பேருந்து நிலையத்திலிருந்து சின்னப்பாா் வழியாக தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளா்கள் பேணியாக சென்றனா்.
ஆா்ப்பாட்டத்திற்கு சேலம் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கத்தின் தலைவா் இளங்கோவன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்ட குழு உறுப்பினா் சண்முகம், ஐஎன்டிஎஸ்சி தலைவா் ஜெயராமன், சிஐடியு மேட்டூா் கிளை செயலாளா் கருப்பண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.