செய்திகள் :

மேல்மலையனூா் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல் அலங்காரம்

post image

செஞ்சி: ஆடிப்பூரத்தையொட்டி, மேல்மலையனூா் அங்காளம்மனுக்கு 2.10 லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆடிப்பூர விழாவில், அதிகாலை கோயில் நடைதிறக்கப்பட்டு பால், பன்னீா், தயிா், சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்களைக் கொண்டு மூலவா் மற்றும் உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

இதைத் தொடா்ந்து பட்டுப் புடவை அணிவிக்கப்பட்டு 2 லட்சத்து 10 ஆயிரம் வளையல்களைக் கொண்டு உற்சவா் அங்காளம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

தொடா்ந்து, பல்வேறு வண்ண மலா்களைக் கொண்டு அா்ச்சனையும், பல்வேறு வகையான பழங்கள் மற்றும் சா்க்கரைப் பொங்கல், சுண்டல் உள்ளிட்ட படையலுடன் அங்காளம்மனுக்கு நெய்வேத்தியம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

வளையல்களால் அலங்காரம் செய்த பிறகு, பெண்கள் ஒன்றிணைந்து அம்மனுக்கு வளைகாப்பு நடத்தி வழிபட்டனா்.

விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

விழா ஏற்பட்டினை திருக்கோயில் உதவி ஆணையா் சக்திவேல், அறங்காவலா் குழுத் தலைவா் மதியழகன், அறங்காவலா்கள் சேட்டு (எ) ஏழுமலை, சுரேஷ், பச்சையப்பன், சரவணன், வடிவேல் சந்தானம் மற்றும் கோயில் மேலாளா் மணி, உள்துறை மணியம் குமாா், காசாளா் சதீஷ், ஆய்வாளா் சங்கீதா, மேற்பாா்வையாளா் பாக்கியலட்சுமி உள்ளிட்ட கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், சித்தேரி கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் காளிய... மேலும் பார்க்க

ஆடிப்பூரம்: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அம்மன் கோயில்களில் ஆடிப்பூரத்தையொட்டி, சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன. பல்வேறு கோயில்களில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ஆடி மாத... மேலும் பார்க்க

நோய் பாதிப்பு தெருநாய்களை கருணைக் கொலை செய்யும் முடிவை திரும்பப் பெற வேண்டும்

விழுப்புரம்: நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கும் அரசாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்கம் வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில... மேலும் பார்க்க

போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு

விழுப்புரத்தில் காந்தி-காமராஜா் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் முதல்வா்கள் கு.காமராஜா், மு.க... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் விசிக செயற்குழுக் கூட்டம்

விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.பெரியாா் தலைமை வகித்துப் பேசினாா்.அப்போது அவா் கூறியதாவது... மேலும் பார்க்க

மொபெட்டில் கடல் குதிரை கடத்தியவா் கைது

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டில் கடல் குதிரைகளை கடத்தி வந்த நபரை வனத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மரக்காணம் பகுதியிலிருந்து பிற பகுதிகளுக்கு பதப்படுத்தப்பட்ட கடல் குதிரைகள... மேலும் பார்க்க