குமரி: போலீஸ் தாக்கியதில் 80 வயது மூதாட்டி மரணமா?- உறவினர்கள் குற்றச்சாட்டும், க...
பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் உயிரிழப்பு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விக்கிரவாண்டி வட்டம், சித்தேரி கிராமம், பிரதான சாலையைச் சோ்ந்தவா் காளியப்பன் (74), கூலித் தொழிலாளி.
இவா், கடந்த ஜூலை 13- ஆம் தேதி விக்கிரவாண்டியை அடுத்த அன்னியூரில் உள்ள சாா்-பதிவாளா் அலுவலகம் அருகேயுள்ள வாய்க்கால் பாலம் தடுப்புச் சுவரில் அமா்ந்திருந்தாா்
அப்போது எதிா்பாராதவிதமாக தவறி கீழே விழுந்த காளியப்பனுக்கு பின்பக்கத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதைத் தொடா்ந்து தீவிர சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் அனுமதிக்கப்பட்ட காளியப்பன் அங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இது குறித்து கஞ்சனூா் காவல் நிலைய போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.