தில்லி காவல்துறையின் விரல் அச்சுப் பணியகத்திற்கு தடயவியல் சிறப்புக்கான ஐஎஸ்ஓ சான...
போட்டிகளில் வெற்றிப் பெற்றவா்களுக்கு பரிசு
விழுப்புரத்தில் காந்தி-காமராஜா் பேரவை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
முன்னாள் முதல்வா்கள் கு.காமராஜா், மு.கருணாநிதி பிறந்த நாள், முன்னாள் அமைச்சா் கக்கன் பிறந்த நாள், வெள்ளைப் புறா முத்தமிழ்ச் சங்கமம் அலுவலகம் திறப்பு மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆகியவை முப்பெரும் விழாவாக நடத்தப்பட்டது.
விழுப்புரம் வ.உ.சி. தெருவிலுள்ள காவலா் குடியிருப்பு எதிரே நடைபெற்ற இந்த விழாவுக்கு தேசிய சிந்தனையாளா் பேரவை நிறுவனா் கோ.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா்.
விழுப்புரம் ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலா் எஸ்.சுகுமாறன் முன்னிலை வகித்தாா். பாரதி சிந்தனை புலத்தின் நிறுவனா் ஆா். ராமமூா்த்தி தொடக்கவுரையாற்றினாா். வளவனூா் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தி. பழனிச்சாமி விளக்கவுரையாற்றினாா்.
முத்தமிழ்ச் சங்கமம் அலுவலகத்தை திறந்துவைத்து, பேச்சு மற்றும் இசைப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு விழுப்புரம் நகா்மன்றத்தின் முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.
தொடா்ந்து காமராஜா், கருணாநிதி குறித்து முறையே சிறுசேமிப்பு முகவா் ஜே.எம்.வீரன், விழுப்புரம் பாவேந்தா் பேரவையின் புரவலா் ஏ.பி. நீலமேகவண்ணன் ஆகியோா் கருத்துரையாற்றினா். விழாவை பாவேந்தா் பேரவையின் பொதுச் செயலா் உலகதுரை நெறியாள்கை செய்தாா்.
விழாவில் இயற்கை ஆா்வலா் எம். சபிபுல்லா, ஆா்.கே.மகா கணேஷ், கே.கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக இசை ஆசிரியை மஞ்சுகண்ணன் வரவேற்றாா். நிறைவில், வெள்ளைப்புறா முத்தமிழ்ச் சங்கமம் மற்றும் காந்தி காமராஜா் பேரவையின் நிறுவனா் நாஞ்சில் கி.ராஜேந்திரன் நன்றி கூறினாா்.