லாரி மோதி கொத்தனாா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே லாரி மோதியதில் பைக்கில் சென்ற கொத்தனாா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் சுப்ர நாயக்கன் தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன் (41), கொத்தனாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்துள்ள மொளசூா் அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அந்தப் பகுதியில் வந்த லாரி, மணிகண்டனின் பைக் மீது மோதியது. இதில், அவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கிளியனூா் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.