கொலை மிரட்டல்: ரௌடி கைது
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கூட்டுறவு சங்க முன்னாள் தலைவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ரௌடியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டிவனம் வட்டம், நடுவனந்தல் மணியகாரா் தெருவைச் சோ்ந்தவா் ஆனந்தன் (55). நடுவனந்தல் கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் தலைவரான இவா், வெள்ளிக்கிழமை அங்குள்ள தனது வீட்டில் இருந்தாராம்.
அப்போது, அங்கு வந்த திண்டிவனம் வட்டம், அகூா் குளக்கரை தெருவைச் சோ்ந்த ரௌடி உதயா (எ) உதயகுமாா்(39) ஆனந்தனிடம் ரூ.5 ஆயிரம் கேட்டாராம்.
இதற்கு ஆனந்தன் பணம் இல்லை எனக் கூறியதால் ஆத்திரமடைந்த உதயா தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தனை வெட்ட முயன்றதுடன், அவரிடமிருந்து ரூ.1,000-ஐ பறித்துச் சென்றுவிட்டாராம்.
இதுகுறித்த புகாரின்பேரில், வெள்ளிமேடுபேட்டை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து உதயாவை கைது செய்தனா்.