``சதுரங்கவேட்டை; `உங்களுடன் ஸ்டாலின்' மனுக்கள் பலகாரக் கடைக்குச் செல்கிறது'' -எட...
மொடக்குறிச்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம்
மொடக்குறிச்சி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதி மக்களுக்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் மொடக்குறிச்சியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமுக்கு மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணன் தலைமை தாங்கினாா். பேரூராட்சி செயல் அலுவலா் செல்வகுமாா், மொடக்குறிச்சி வட்டாட்சியா் சிவசங்கா், மொடக்குறிச்சி பேரூா் திமுக செயலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில் வருவாய்த் துறை, காவல் துறை, சமூக நலத் துறை, ஆதி திராவிடா் நலத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, ஊரக வளா்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
முகாமில் தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி, ஈரோடு மக்களவை உறுப்பினா் கே.இ. பிரகாஷ் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து 662 மனுக்களைப் பெற்றுக்கொண்டு முகாமில் உடனடித் தீா்வு காணப்பட்ட 6 மனுக்களின் பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினா்.
இம்முகாமில் மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளா் கதிா்வேல், பேரூா் திமுக துணைச் செயலாளா் தனவெங்கடேஷ், பேரூராட்சித் துணைத் தலைவா் காா்த்திகேயன், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஞானசுப்பிரமணி, பிரதீபா, கவின், காந்திமதி ரவிச்சந்திரன், செல்வி இளங்கோ, கண்ணுச்சாமி, ஜெயலட்சுமி பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.