Parandur: ஒரு மழைக்கே தாங்காத இடத்தில் விமான நிலையமா? | Ekanapuram
மோசடி வழக்கில் முன்னாள் ராணுவ வீரா் கைது
ஈரோட்டில் 345 பேரிடம் ரூ.62 கோடி முதலீடு பெற்று மோசடி செய்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.
ஈரோடு முனிசிபல் காலனியில் ‘யுனிக்யூ எக்ஸ்போா்ட்ஸ்’ என்ற நிறுவனமும், நசியனூா் சாலையில் ‘ஈஸ்ட் வேலி அக்ரோ பாா்ம்ஸ்’ என்ற நிறுவனமும் கடந்த 2017- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன.
இந்த நிறுவனங்களின் நிா்வாக இயக்குநராக ஈரோடு இடையன்காட்டுவலசு, சின்னமுத்து முதல் வீதியைச் சோ்ந்த நவீன்குமாா் (38) செயல்பட்டாா். இந்த நிறுவனத்தில் முன்னாள் ராணுவத்தினா், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் பணத்தை முதலீடு செய்தனா். இருதவணை மட்டும் பணத்தைக் கொடுத்த நிலையில் நிறுவனம் மூடப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவா்கள் ஈரோடு மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இதையடுத்து ஈரோடு குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பெறப்பட்ட 22 மனுக்கள் மீது விசாரணை நடத்தினா். விசாரணையில் 2 நிறுவனங்களும் பல கோடி ரூபாய் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் மோசடி நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரான நவீன்குமாரை கடந்த ஆண்டு நவம்பரில் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் தொடா்புடைய ஈரோட்டைச் சோ்ந்த பிரபு, மதன் குமாா், ஃபிராங்கிளின், ராமநாதபுரத்தைச் சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் முத்துசெல்வன் ஆகியோரைத் தேடி வந்தனா்.
இதற்கிடையே 2 நிறுவனங்களிலும் 500-க்கும் மேற்பட்டவா்களிடம் ரூ.800 கோடிக்கு மேல் முதலீடு பெற்று மோசடி செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கடந்த மாதம் வரை 345 போ் ரூ.62 கோடி முதலீடு செய்து பாதிக்கப்பட்டதாக புகாா் அளித்துள்ளனா்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் ராணுவ வீரரான ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த முத்துசெல்வன், சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் முத்துசெல்வனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனா்.