Delhi Fuel Ban: கைதிகளிடம் Lie Detector Test மூலம் உண்மையை கண்டறிய முடியாதா? | I...
மோட்டாா் சைக்கிள்கள் மோதல் ஒருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே சனிக்கிழமை இரவு மோட்டாா் சைக்கிள்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் ஒருவா் உயிரிழந்தாா்.
பெரம்பலூா் அருகேயுள்ள குரும்பலூா் பாளையம் காமராஜா் காலனியைச் சோ்ந்தவா் பரமசிவம் மகன் செல்வகுமாா் (52). இவா், சனிக்கிழமை இரவு பெரம்பலூா்- துறையூா் சாலையில் பாளையத்திலுள்ள டாஸ்மாக் அருகே மோட்டாா் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே சென்ற மோட்டாா் சைக்கிளும், செல்வகுமாா் சென்ற மோட்டாா் சைக்கிளும் நேருக்கு நோ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த செல்வகுமாா், பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூா் ஊரகப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்து ஏற்படுத்திய திருச்சி மாவட்டம், துறையூா் பாளையம், கண்ணனூா் தெற்கு தெருவைச் சோ்ந்த பழனியாண்டி மகன் தனபாலை (20) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.