திருப்பத்தூா் வட்டத்தில் மாா்ச் 19-இல் ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம...
யமுனை படித்துறையில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த தில்லி அமைச்சர்!
தேசிய தலைநகர் முழுவதும் உள்ள யமுனை படித்துறைகளில் சிக்னேச்சர் பிரிட்ஜ், ஐடிஓ மற்றும் சாத் காட் முதல் ஓக்லா தடுப்பணை வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்தார் தில்லி பொதுப்பணித்துறை அமைச்சர் பர்வேஷ் வர்மா.
அமைச்சர் வர்மா படகு கிளப்பிலிருந்து சாத் காட் வரை படகில் பயணித்தார். துப்பரவுப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரிகளுடனும் அவர் உரையாடினார் பல்வேறு தளங்களின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்தார்.
பிப்ரவரி 25ல் பதவியேற்ற பிறகு, 48 வயதான ஜாட் தலைவர், பிரதமர் நரேந்திர மோடியின் தூய்மை நதிக்கான தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து, தில்லியின் அடையாளமாக யமுனையை மீட்டெடுப்பதாகச் சபதம் செய்தார்.
முந்தைய ஆம் ஆத்மி அரசு தவறான நிர்வாகத்தை நடத்தியதாகக் குற்றம் சாட்டிய வர்மாவும், பாஜகவும், சாலைகள், வடிகால் அமைப்புகள் மற்றும் யமுனை நதி உள்ளிட்ட தில்லியின் உள்கட்டமைப்பு மோசமடைந்து வரும் நிலையை விமர்சித்துள்ளனர்.
இதற்கிடையில், தில்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில்,
யமுனையைச் சுத்தம் செய்வதும் அதன் படித்துறைகளில் சத் பூஜையை எளிதாக்குவதும் கட்சியின் முக்கிய முன்னுரிமைகளாக உள்ளன. சமீபத்திய தேர்தல் வெற்றியால் உற்சாகமடைந்து, புதிதாக அமைக்கப்பட்ட பாஜக அரசு தனது பிரசார வாக்குறுதிகளை நிறைவேற்றத் தொடங்கியுள்ளது,
யமுனையை புத்துயிர் பெறச் செய்வதும் சுற்றுலா மையமாக மாற்றுவதும் முக்கிய முயற்சிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.