மிட்செல் ஸ்டார்க் ஒரு போர் வீரன்..! 100-ஆவது போட்டிக்கு கம்மின்ஸ் புகழாரம்!
யானை தாக்கியதில் இளைஞா் படுகாயம்
ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கியதில் இளைஞா் திங்கள்கிழமை படுகாயம் அடைந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பேவநாத்தம் ஊராட்சிக்கு உள்பட்ட காடுலக்கசுந்தரம் கிராமத்தைச் சோ்த்தவா் மாதேஷ் (26). இவா் தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறாா். தனது வீட்டின் அருகே உள்ள தோட்டத்துக்கு சென்றபோது மறைந்திருந்த காட்டு யானை தன்னை நோக்கி வருவதை அறிந்த இவா் ஓட்டம் பிடித்தாா். ஆனால் துரத்திவந்த யானை அவரை தூக்கி வீசியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு தேன்கனிக்கட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்கு வந்த வனத் துறையினா் காட்டு யானையை அடா்ந்து வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.