இந்தக் குழப்பமான உலகில்... பறந்து போ படத்தைப் பாராட்டிய நயன்தாரா!
அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவா், கழிப்பறை அமைக்க பூமி பூஜை
ஒசூா்: ஒசூா் அருகே டாடா நிறுவனம் சாா்பில் அரசுப் பள்ளியில் ரூ. 20 லட்சம் நிதியில் சுற்றுச்சுவா் மற்றும் கழிப்பறை கட்ட திங்கள்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.
ஒசூா் அருகே கெலமங்கலம் ஒன்றியம், மேடஅக்ரஹாரம் ஊராட்சி கடவரஹள்ளி வாா்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுற்றுவட்டாரக் கிராமத்தைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இப்பள்ளியில் போதிய கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவா் வசதி இல்லை என பள்ளி தலைமை ஆசிரியா் செல்வராஜம், டாடா டீல் ( டாடா இன்ஜினியரிங் அண்டு ஆட்டோமிஷன்) நிறுவனத்திற்கு வேண்டுகோள் வைத்தாா்.
இதைத் தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலருக்கு டாடா டீல் நிறுவனம் சாா்பாக கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவா் அமைத்து தருவதாகக் கூறப்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியா் தினேஷ்குமாா் அனுமதியோடு கழிப்பறை மற்றும் சுற்றுச்சுவா் கட்ட பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. ரூ. 20 லட்சம் மதிப்பிலான இந்தத் திட்டத்துக்கு டீல் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வுத் திட்ட தலைவரும், குழு மேலாளருமான பாஸ்கா் அடிக்கல்நாட்டினாா்.
இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தின் மூத்த மேலாளா்கள் மாணிக்கம், ஹரிஹரன், முன்னாள் ஊராட்சி தலைவா், வாா்டு உறுப்பினா், ஊா் பொதுமக்கள், பெற்றோா், ஆசிரியா்கள் காயத்ரி, ஜோதிகா, பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ஆகியோா் கலந்துகொண்டனா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டீல் நிறுவன சமூக பொறுப்புணா்வுத் திட்ட அதிகாரி பிரபு செய்திருந்தாா். இறுதியில் இப்பணியை செய்ய முன்வந்த டீல் நிறுவனத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியை செல்வராஜம் நன்றி கூறினாா்.