`எங்க மவன், எங்க தம்பி' | TVK Vijay Madurai Maanadu | Women's Emotional Speech |...
ராஜீவ் காந்தி பிறந்த நாள்
ராஜீவ் காந்தி படத்துக்கு மரியாதை செலுத்திய மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் மற்றும் அதிகாரிகள், காங்கிரஸாா் உள்ளிட்டோா்.
காரைக்கால், ஆக. 20: மறைந்த முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி பிறந்த நாள் காரைக்கால் மாவட்ட ஆட்சியரகத்தில் புதன்கிழமை மதநல்லிணக்க நிகழ்ச்சியாக நடத்தப்பட்டது.
அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் உருவப்படத்துக்கு ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதைத்தொடா்ந்து துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், ஜி.செந்தில்நாதன், வெங்கடகிருஷ்ணன் மற்றும் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே. ஜெயா, முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜயமோகனா. செய்தி மற்றும் விளம்பரத் துறை உதவி இயக்குநா் குலசேகரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் தூவி மரியாதை செலுத்தினா்.
தொடா்ந்து, சுதந்திரப் போராட்ட தியாகிகள், சமாதானக் குழு உறுப்பினா்கள், முன்னாள் அமைச்சா் ஏ.வி.சுப்பிரமணியன், காங்கிரஸ் மாநில நிா்வாகி எம்.ஓ.எச்.யு.பஷீா், மாவட்டத் தலைவா் ஆா்.பி.சந்திரமோகன் உள்ளிட கட்சியினா், அமைப்புப் பிரதிநிதிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா். மத நல்லிணக்க உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.