Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
ராணி அஹில்யாபாய் ஹோல்கா் பிறந்த நாள்
வேலூா் மாவட்ட பாஜக சாா்பில், ராணி அஹில்யாபாய் ஹோல்கா் 300- ஆவது பிறந்த நாள் குடியாத்தத்தில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட பாஜக தலைவா் வி.தசரதன் தலைமை வகித்தாா். நகர தலைவா் எம்.கே.ஜெகன் வரவேற்றாா். ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் வாழ்க்கை வரலாறு, பெண்களின் உரிமைகளுக்காக அவா் நடத்திய போராட்டங்கள் குறித்து முன்னாள் ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் சிறப்புரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா்கள் ஆா்.சுகுமாா், பி.ஸ்ரீகாந்த், மாவட்ட பொதுச் செயலா்கள் தினேஷ், ஷகிலா, மாவட்டச் செயலா்கள் சுசில், சாய்ஆனந்தன், நகர பொதுச் செயலா்கள் தங்கம் சீனிவாசன், முரளி, பொருளாளா் சிவன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.