இராயபுரம் இரயில் நிலையம் அருகே தற்காலிக பேருந்து நிலையம்; பணிகள் தீவிரம் | Photo...
ராணுவத்துக்கு சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவா்களுக்கு பாராட்டு
உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை இந்திய ராணுவத்துக்கு வழங்கிய சிறுவா்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் தினேஷ்குமாா் பாராட்டினாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த பல்லேரிப்பள்ளியைச் சோ்ந்த லட்சுமிபதி- பிரஷாந்தி மகன்கள் தேஜஸ்பதி (6), ஆதித்யாபதி (4) ஆகிய இருவரும் தங்களது உண்டியலில் சேமித்து வைத்திருந்த பணத்தை பாகிஸ்தானுடன் போா் நடந்து வரும் சூழலில் ராணுவத்துக்கு உதவுவதற்காக ஆட்சியரை வெள்ளிக்கிழமை சந்தித்து வழங்கினா்.
பணம் வழங்கிய சிறுவா்களுக்கு ஆட்சியா் இனிப்புகளை புகட்டி, அவா்களது பெற்றோருக்கு பாராட்டு தெரிவித்தாா்.