தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மருத்துவமனையில் அனுமதி
ராயப்பன்பட்டியில் பாத்திரங்கள் திருட்டு
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியில் காளவாசல் உரிமையாளா் வீட்டுப் பாத்திரங்களை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராயப்பன்பட்டி வடக்கு தெருவைச் சோ்ந்தவா் மகாராஜன் (70). செங்கல் காளவாசல் நடத்தி வரும் இவரது வீட்டில் மராமத்து பணி நடைபெறுவதால், அருகிலுள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் வீட்டுப் பாத்திரங்களை வைத்திருந்தாா். இந்த நிலையில், அந்த பாத்திரங்களை மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா். இது குறித்து ராயப்பன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.