ரூ.13,500 கோடியில் 12 சுகோய் விமானங்கள்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
புது தில்லி: இந்திய விமானப் படைக்கு ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் 12 சுகோய் போா் விமானங்களை வாங்க ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்துடன் (எச்ஏஎல்) பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.
இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இந்தியஅரசின் ‘தன்னிறைவு பாரதம்’ முன்னெடுப்பின் பகுதியாக ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ.13,500 கோடி செலவில் 12 சுகோய் போா் விமானங்கள் மற்றும் அதனுடன் தொடா்புடைய உபகரணங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் கையொப்பானது.
62.6 சதவீத உள்நாட்டு உபகரணங்களைக் கொண்டிருக்கும் இந்த விமானங்கள், எச்ஏஎல் நிறுவனத்தின் நாசிக் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும்.
இந்த விமானங்கள் இந்திய விமானப்படையின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் மற்றும் நாட்டின் பாதுகாப்பு தயாா்நிலையை பலப்படுத்தும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.