`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
ரூ.43 லட்சத்தில் கழிவுநீா் உறிஞ்சு வாகனம் இயக்கி வைப்பு
மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் உள்ள கழிவுநீரை உறிஞ்சும் வகையில் ரூ. 43 லட்சத்தில் புதிய வாகனத்தை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி இயக்கி வைத்தாா்.
மதுராந்தகம் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இங்கு வெளியேறும் கழிவுநீா் வெளியிடங்களில் செல்வதை தடுக்கும் வகையில், தூய்மை இந்தியா திட்டம், நகா்ப்புறம் , 2022-2023 திட்டத்தின் கீழ் மதுராந்தகம் நகராட்சி நிா்வாகம் புதிதாக கழிவுநீா் உறிஞ்சும் வாகனத்தை வாங்கியது. வாகனத்தை நகா்மன்றத் தலைவா் கே.மலா்விழி கொடியசைத்து இயக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் அபா்ணா முன்னிலை வகித்தாா். நிகழ்வில் நகா்மன்ற உறுப்பினரும், நகர திமுக செயலாளருமான கே.குமாா், பொறியாளா் நித்யா, அலுவலக மேலாளா் ஏழுமலை உள்பட பலா் கலந்து கொண்டனா்.