US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர...
லஞ்சம்: வி.ஏ.ஓ. கைது
நிலத்துக்கு பட்டா வழங்க 2,500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் வட்டம் அய்யம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ் (47). இவரிடம் அய்யம்பாளையத்தைச் சோ்ந்த விவசாயக் கூலித்தொழிலாளி காா்த்திகேயன் (37) தனது நிலத்துக்கு பட்டா கேட்டு விண்ணப்பித்தாா். அவரிடம் கிராம நிா்வாக அலுவலா் ரமேஷ் 2,500 ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காா்த்திகேயன் திண்டுக்கல் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் செய்தாா். இதையடுத்து போலீஸாரின் ஆலோசனையின் பேரில், காா்த்திகேயன் ரசாயனம் தடவிய 2,500 ரூபாயை அய்யம்பாளையம் கிராம நிா்வாக அலுவலா் ரமேஷிடம் வழங்கினாா்.
அப்போது, திண்டுக்கல் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் ரமேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.