வாட்ஸ்ஆப் லாக்கை ஹேக் செய்த மனைவிக்கு அதிர்ச்சி: பல பெண்களுடன் சாட், வீடியோ; கணவ...
லாட்டரி விற்றவா் கைது
வெள்ளக்கோவிலில் லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்டவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சந்திரன் மூலனூா் சாலையில் ரோந்து பணியில் சனிக்கிழமை ஈடுபட்டிருந்தாா்.
அப்போது,சொரியங்கிணத்துப்பாளையம் பிரிவு அருகே லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நபரைப் பிடித்தாா்.
விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த முனியாண்டி (35) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, முனியாண்டியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனா்.