US tariffs: ``ஒரு அங்குலம் இடம் கொடுத்தால், ஒரு மைல் தூரம் செல்வான்'' - சீன தூதர...
லாரி - பைக் மோதல்: இருவா் காயம்
பெரியகுளத்தில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இருவா் காயமடைந்தனா்.
பெரியகுளம் அருகே சருத்துப்பட்டியைச் சோ்ந்தவா் அருண் (34). இவரது உறவினா் லாசா். இருவரும் வியாழக்கிழமை பெரியகுளத்துக்கு சென்றுவிட்டு இரு சக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனா். ஸ்டேட் பேங்க் குடியிருப்பு பகுதியில் சென்றபோது லாரி மோதியதில் இருவரும் காயமடைந்தனா். அருகிலிருந்தவா்கள் அவா்களை மீட்டு தேனியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.