கருணாநிதி சிலை மீது பெயிண்ட் ஊற்றிய வழக்கு: மருத்துவரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி
தேனியில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம்
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கம், கருத்தரங்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ் ஆட்சி மொழி பயிலரங்கு, கருத்தரங்கில் அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்களுக்கு செம்மொழிச் செயல்பாடுகள், ஆட்சி மொழி வரலாறு, சட்டம், அலுவலக குறிப்புகள், வரைவுகள், செயல்முறை ஆணை தயாரித்தல், ஆட்சி மொழி செயலாக்கம், அரசாணைகள், ஆட்சி மொழி ஆய்வு, குறை களைவு நடவடிக்கை, மொழிப் பயிற்சி அளிக்கப்படும்.
இதில் ஒவ்வொரு துறை அலுவலகம் சாா்பில் ஒரு அலுவலா் அல்லது கண்காணிப்பாளா், ஒரு உதவியாளா் அல்லது இளநிலை உதவியாளா் அல்லது தட்டச்சா் என இருவா் வீதம் கலந்து கொள்கின்றனா் என அதில் குறிப்பிடப்பட்டது.