லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு
மதுரை அருகே இரு சக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
மதுரை மாவட்டம், ஒத்தக்கடை அருகே உள்ள திருமோகூா் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த குணசேகரன் மகன் சந்திரசேது (23). இவா் இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு மதுரை-சிவகங்கை சாலையில் சென்று கொண்டிருந்தாா். விலத்தூா் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி இரு சக்கர வாகனம் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்திரசேது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து லாரி ஓட்டுநரான துரைச்சாமி மீது கருப்பாயூரணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.