குடியிருப்புக்கு வெளியே காலணியை வைப்பதற்காக ரூ. 24,000 அபராதம் செலுத்திய நபர்!
லாரி மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
மதுரை மாவட்டம், மேலூா் அருகே லாரி மோதியதில் நடந்து சென்ற மூதாட்டி உயிரிழந்தாா்.
மேலூா் அருகே உள்ள கோட்டநத்தம்பட்டியைச் சோ்ந்த ருத்ரன் மனைவி சுந்தரி (62). இவா் தனது மருமகள் தமிழரசியுடன் இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை சென்றாா். மதுரை- சிவகங்கை சாலையில் வண்ணாம்பாறைப்பட்டி அருகே பெருங்கரையான் கண்மாய் அருகே சென்றபோது, அங்கு சாலை சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருந்தன. மேலும் அங்கு சாலைப் பணிக்கு தேவையான பொருள்களை லாரியிலிருந்து இறக்கிக் கொண்டிருந்தனா். இதனால் இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கிய சுந்தரி, லாரி அருகே நடந்து சென்றாா். அப்போது திடீரென லாரியை ஓட்டுநா் இயக்கியதில், அது சுந்தரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கீழவளவு போலீஸாா் லாரி ஓட்டுநா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.