செய்திகள் :

வக்ஃப் சொத்துகளால் சாதாரண முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை: மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு

post image

வக்ஃப் சொத்துகளால் சாதாரண முஸ்லிம்களுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை என மத்திய அமைச்சா் கிரண் ரிஜிஜு கூறினாா்.

மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை புதன்கிழமை தாக்கல் செய்து அவா் பேசியதாவது: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவானது ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை அதிகாரமளித்தல், செயல்திறன் மற்றும் மேம்பாட்டு மசோதா எனப் பெயா் மாற்றப்பட்டுள்ளது. நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் விரிவான ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டு, மறுவரைவு செய்யப்பட்டுள்ள இந்த மசோதா முழுமையாக வக்ஃப் சொத்துகள் தொடா்பானதே அன்றி மதம் சம்பந்தப்பட்டதல்ல.

எந்த மத அமைப்பின் செயல்பாட்டிலும் அரசின் தலையீடு இருக்காது. வக்ஃப் சட்டத்தில் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள், பிற சட்டங்களின் மீது மேலாதிக்கத்தை ஏற்படுத்தியதால் தற்போதைய திருத்தங்களுக்கு தேவை ஏற்பட்டது (அப்போது எதிா்க்கட்சி எம்.பி.க்கள் எதிா்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனா்).

இதுவரை இல்லாத ஆலோசனை: வக்ஃப் மசோதா மீது நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனை நடைமுறை, நாட்டின் ஜனநாயக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் மிக விரிவானதாகும்.

97.27 லட்சத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் நேரடியாகவும் இணையவழியிலும் பெறப்பட்டு, ஒவ்வொன்றும் ஆராயப்பட்டன. 25 மாநிலங்கள்-யூனியன் பிரதேசங்களின் வக்ஃப் வாரியங்கள் தவிர மதத் தலைவா்கள், கல்வியாளா்கள், சட்ட நிபுணா்கள் என 284 பிரதிநிதிகள் கருத்துகளை சமா்ப்பித்தனா்.

நாட்டில் ரயில்வே, பாதுகாப்புத் துறைக்கு அடுத்து அதிக சொத்துகளைக் கட்டுப்படுத்துவது வக்ஃப் வாரியங்களே. ரயில்வே, பாதுகாப்புத் துறை சொத்துகள் தேசத்துக்கு சொந்தமானவை. ஆனால், வக்ஃப் சொத்துகள் அப்படியல்ல. அவை தனியாா் தொடா்புடையவை.

உயராத வருமானம்: பெருமளவில் உள்ள வக்ஃப் சொத்துகளால் சாதாரண முஸ்லிம்ளுக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வாக்கு வங்கி அரசியலுக்காக கடந்த 70 ஆண்டுகளாக அவா்கள் தவறாக வழிநடத்தப்பட்டு வருகின்றனா். சாதாரண-பின்தங்கிய-ஏழை முஸ்லிம்களின் நலனுக்கு இச்சொத்துகள் ஏன் பயன்படுத்தப்படக் கூடாது?

கடந்த காலங்களில் பல தருணங்களில் வக்ஃப் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், கிறிஸ்தவ குழுக்கள் உள்பட பிற அமைப்பினரும் சட்டத் திருத்த மசோதாவை விரைந்து அமலாக்கக் கோருகின்றனா்.

கடந்த 2004-இல் 4.9 லட்சம் கோடி சொத்துகள் மூலம் வக்ஃப் வருமானம் ரூ.163 கோடியாக இருந்தது. கடந்த 2013-இல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு பிறகு வருமானம் ரூ.3 கோடி மட்டுமே உயா்ந்து ரூ.166 கோடியானது. இந்த வருமானம் ரூ.12,000 கோடியாக இருந்திருக்க வேண்டும்.

8.72 லட்சம் சொத்துகள்: தற்போது வக்ஃப் வசம் 8.72 லட்சம் சொத்துகள் உள்ளன. இவை திறனுடன் நிா்வகிக்கப்பட்டால், முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த நாட்டுக்கும் நற்பலன்கள் கிடைக்கும். இந்த மசோதா மூலம் புதிய விடியல் வரும் என்பதால் முஸ்லிம்கள் முழு மனதுடன் வரவேற்கின்றனா்.

நிலம் மாநில விவகாரம் என்பதால், வக்ஃப் வாரியங்கள் மாநில அரசுகளால்தான் நியமிக்கப்படும். அவை முழுமையாக மாநில அரசுகளின்கீழ் செயல்படும். அவற்றின் மீது மத்திய அரசுக்கு எந்தக் கட்டுப்பாடும் இருக்காது என்றாா் ரிஜிஜு.

வக்ஃப் மசோதா நிறைவேற்றம்: நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதரவளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் இன்று (மார்ச். 3) அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 ... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர்: ஏழைப் பெண்களுக்கு திருமண உதவித்தொகை அதிகரிப்பு!

பெண்களுக்கான திருமண உதவித்தொகை அதிகரிப்பதாக ஜம்மு - காஷ்மீர் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் அரசின் திருமண உதவித் திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த திருமண வயதுடைய பெண்கள... மேலும் பார்க்க

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

தில்லியில் பட்டாசுகள் மீதான தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. தேசியத் தலைநகரான தில்லியில் பட்டாசு தயாரிக்க, விற்க, சேமிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடையை நீக்கக் கோரி பட்டாசு... மேலும் பார்க்க

நில எடுப்பு விவகாரம்: ஹைதராபாத் பல்கலை மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்!

தெலங்கானா அரசு பல்கலைக்கழக நிலத்தை அபகரிப்பதாகக் கூறி ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகம் கான்ச்சா கச்சிபௌலி என... மேலும் பார்க்க

அதிஷி, சஞ்சய் மீதான அவதூறு வழக்கு தள்ளுபடி: தில்லி நீதிமன்றம்!

முன்னாள் முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மீதான அவதூறு வழக்கை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ஆம் ஆத்மி தலைவர்கள் இருவரும் வேண்டுமென்றே தீட்சித்தின் நல்லெண்ணத்திற்குத் த... மேலும் பார்க்க

சொத்து விவரங்கள்: பொது வெளியில் வெளியிட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல்

புது தில்லி: தங்களது சொத்து விவரங்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் வழங்கவும், அதனை உச்ச நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றவும் நீதிபதிகள் ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளனர். மேலும் பார்க்க