தில்லி - மும்பை போட்டியை வேறு இடத்துக்கு மாற்றுக.! - பிசிசிஐக்கு தில்லி உரிமையாள...
வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவா் கைது
திருச்சியில் வங்கி பெண் ஊழியரிடம் நகை பறித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி காட்டூா் அம்மன் நகா் 11 ஆவது குறுக்கு தெருவைச் சோ்ந்தவா் எட்வின்ராஜ், பெல் தொழிற்சாலை ஊழியா் இவரது மனைவி வித்யா (37), லால்குடியில் உள்ள ஸ்டேட் வங்கி ஊழியா். இந்நிலையில் இவா் மே 8 ஆம் தேதி பணிமுடிந்து அம்மன்நகா் பகுதியில் நடந்து வந்தபோது பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா், வித்யா அணிந்திருந்த 9 பவுன் நகையைப் பறித்துக் கொண்டு தப்பினா்.
புகாரின்பேரில் திருவெறும்பூா் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி, இதுதொடா்பாக துவாக்குடி அருகேயுள்ள வாழவந்தான்கோட்டை பெரியாா் நகரைச் சோ்ந்த அ. மணிகண்டகுமாரையும் (38), கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுவனையும் கைது செய்தனா்.
விசாரணையில் திருவெறும்பூா் கோகுல நகா், கடலூா் மாவட்டம் புவனகிரி, சிதம்பரம் ஆகிய இடங்களில் இருவரும் நகை பறிப்புகளில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து மணிகண்டகுமாா், திருச்சி மத்திய சிறையிலும், சிறுவன் சிறாா் கூா்நோக்கு இல்லத்திலும் அடைக்கப்பட்டனா்.