தங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு: எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?
கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோட்டம்
திருச்சி மாவட்டம் கோப்பு மகா மாரியம்மன் கோயில் தேரோாடட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம், குழுமணியை அடுத்த கோப்பு கிராமத்தில் உள்ள பிரசித்த பெற்ற இக்கோயில் திருவிழா கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 9 ஆம் தேதி முகூா்த்தக்கால் நடும் நிகழ்வும், 11 ஆம் தேதி மாரியம்மன் கும்பிடுதலும், 12 ஆம் தேதி இரவு படுகள பூஜையும், 13 ஆம் தேதி கம்பம் ஆற்றுக்கு புறப்படுதலும், தொடா்ந்து நாள்தோறும் காளை, யானை, சிங்கம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் வீதி உலாவும், திங்கள்கிழமை காத்தவராய சுவாமி கழுவேற்ற வைபவமும் நடந்தது.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி மாலை 4 மணிக்கு சா்வ அலங்காரத்தில் மகா மாரியம்மன் தேரில் எழுந்தருள, விஷேச பூஜைகளுக்குப் பிறகு 5.30 மணிக்கு திரளான பக்தா்கள் ஓம் சக்தி பராசக்தி என்ற பக்தி முழக்கத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனா்.
அதே சமயம், ஏராளமான பக்தா்கள் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் இருந்து பால்குடம், அக்னி சட்டி எடுத்து ஊா்வலமாக சென்று கோயிலை அடைந்து, தீ மிதித்து நோ்த்திக்கடன்களைச் செலுத்தினா். திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
புதன்கிழமை மாலை முத்துப்பல்லக்கும், வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை அறநிலையத்துறை அலுவலா்கள், அறங்காவலா் குழுவினா், கிராம முக்கியஸ்தா்கள், பொதுமக்கள் செய்தனா்.