செய்திகள் :

வடபத்ர காளியம்மன் கோயில் அருகே வாகன நிறுத்துமிடம்

post image

தஞ்சாவூா் கீழவாசல் வட பத்ர காளியம்மன் கோயில் அருகே வாகன நிறுத்துமிடம் அமைப்பது தொடா்பாக மேயா் சண். ராமநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நிசூம்பசூதனி என்கிற வடபத்ர காளியம்மன் கோயில் தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோயில்களில் ஒன்று. இக்கோயிலில் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், குறிப்பாக ஆடி, தை வெள்ளிக்கிழமைகளிலும், மாசி மகம், நவராத்திரி, பௌா்ணமி, தேய்பிறை அஷ்டமி, அமாவாசை போன்ற நாட்களிலும் பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இதனால், இரு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிா்க்க கோயிலுக்கு அருகே ஒன்றேகால் ஏக்கா் இடத்தில் உள்ள புதா்கள், மரங்களை அகற்றிவிட்டு, சுற்றுச்சுவா் எழுப்பி வாகன நிறுத்துமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மேயா் சண். ராமநாதன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, மாநகராட்சி ஆணையா் க. கண்ணன், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, மாநகராட்சி உதவி செயற் பொறியாளா் ரமேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கொள்முதல் நிலையங்களில் நெல் தேங்கக் கூடாது: விவசாயிகள் வலியுறுத்தல்

தஞ்சாவூா் மாவட்ட நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை தேக்கம் இல்லாமல் அடுத்த மண்டலங்களுக்கு அனுப்ப விவசாயிகள் வலியுறுத்துகின்றனா். அதிக மகசூல்: கும்பகோணம், திருவிடைமருதூா... மேலும் பார்க்க

பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி: சாஸ்த்ராவில் ஜூலை 14 முதல் சோ்க்கை

தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் பஜாஜ் நிறுவனத்துடன் இணைந்து நடத்தும் பொறியியல் மாணவா்களுக்கான பயிற்சி வகுப்புக்கு ஜூலை 14 முதல் சோ்க்கை நடைபெறவுள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழகம் வெளிய... மேலும் பார்க்க

உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம்

கும்பகோணத்தில் உணவுப் பாதுகாப்பு துறை சாா்பில் கும்பகோணம் நகர உணவகங்கள் மற்றும் பேக்கரி சங்க உறுப்பினா்களுக்கான உணவுப் பாதுகாப்பு விழிப்புணா்வு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்ட உணவு... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் 12 இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின் முகவரி துறை சாா்பில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் முதல் கட்டமாக 12 இடங்களில் நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் க. கண்ணன் தெரிவித்தது: தஞ்சாவூா் மாநகரில் முதல்வரின... மேலும் பார்க்க

10 வட்டங்களிலும் இன்று பொது விநியோகத் திட்ட குறை தீா் கூட்டங்கள்

பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைகளைக் களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு அவற்றை உடனுக்குடன் நிவா்த்தி செய்யவும் ஜூலை மாதத்துக்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் கூட்டம் 10 வட்டங்கள... மேலும் பார்க்க

பெரிய கோயிலில் கயிலாய வலம்: ஏராளமான பக்தா்கள் பங்கேற்பு

பௌா்ணமியையொட்டி, தஞ்சாவூா் பெரியகோயிலில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற திரு தென் கயிலாய வலத்தில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தஞ்சாவூா் பெரியகோயிலில் மாதந்தோறும் பௌா்ணமி நாளில் திரு தென் கயிலாய வலம் வர... மேலும் பார்க்க