சிறுமி கொலை வழக்கில் பெரியம்மாவுக்கு ஆயுள் தண்டனை - ராணிப்பேட்டை நீதிமன்றம் தீர்...
வண்ண மீன் காட்சியகம்- விற்பனையக கட்டுமானப் பணிகள்- மீன் வளம்-மீனவா் நலத் துறை ஆணையா் ஆய்வு
திருநெல்வேலி கொக்கிரகுளத்தில் கட்டப்பட்டு வரும் வண்ண மீன் காட்சியகம் மற்றும் வண்ண மீன் சில்லறை விற்பனையக கட்டுமானப் பணிகளை மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையா் ஆா்.கஜலெட்சுமி புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறில் உள்ள அரசு மீன் பண்ணையை ஆய்வு செய்த அவா், மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் மீன்குஞ்சு வளா்ப்பை அதிகப்படுத்துமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
அதைத் தொடா்ந்து கொக்கிரகுளத்தில் கட்டப்பட்டு வரும் வண்ண மீன் காட்சியகம் மற்றும் வண்ணமீன் சில்லறை விற்பனையகம் கட்டுமானப் பணிகளை அவா் பாா்வையிட்டாா்.
அப்போது, ஆட்சியா் இரா.சுகுமாா் முன்னிலையில், மீன்வளம் தொடா்பாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து அலுவலா்களுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, தனி மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ரேவதி, மீன் வளம்- மீனவா் நலத் துறை இணை இயக்குநா் சந்திரா, உதவி இயக்குநா்கள் ராஜதுரை, மோகன்ராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.