``அதிமுக தொண்டர்களுக்கு வணக்கம்'' -செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு ஆரம்பம்
வரதராஜ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம்
கடலூா் மாவட்டம் காட்டுமன்னாா்கோவில் அருகே வேளம்பூண்டி கிராமத்தில் இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான அருள்மிகு வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் ஜீா்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த செப்.2 ம் தேதி மாலை ணிக்கு அநுஜ்ஞை,, வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. 3-ம் தேதி புதன்கிழமை காலை கும்ப ஸ்தாபனம், ரக்ஷாபந்தனத்துடன் முதல் கால ஹோம பூஜையும், மாலை இரண்டாம் கால ஹோம பூஜைகளும், 4-ம் தேதி தேதி வியாழக்கிழமை காலை சுப்ரபாதம், திருப்பள்ளி எழுச்சியும், மூன்றாம் கால யாக பூஜை ஹோமங்கள் நடைபெற்றன. பின்னா் யாகசாலையில் இருந்து புனித நீா் அடங்கிய கடம் புறப்பாடு நடைபெற்று கோயில் விமானக் கலசத்தை அடைந்து கோயில் கலசங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. மேலும் கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை ஸ்ரீ நிவாஸாசாா்யா் சா்வ ஸாதகம் புலவா் க.கோஸகன் பட்டாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தாா். கும்பாபிஷேக ஏற்பாடுகளை அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கருணாநிதி, அறங்காவலா்கள் ஜே.மகேஸ்வரி, ஜெயராமன், எஸ்.ரமேஷ், ரெட்டியூா் ஜிவிஎஸ்.கல்யாணசுந்தரம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.