இத்தாலியில் சாலையில் திடீரென விழுந்து தீப்பிடித்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி
வரலாற்றுச் சாதனையுடன் நற்செய்தி... 45 வயதில் காதலரை அறிவித்த வீனஸ் வில்லியம்ஸ்!
டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் தனது காதலரான ஆண்ட்ரியா பிரெடியை அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் வில்லியம்ஸ் (45 வயது) ஒற்றையர் பிரிவில் 7 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.
16 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். டிசி ஓபன் ஒற்றையர் பிரிவில் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் 6-3, 6-4 என்ற நேர்செட்களில் சக அமெரிக்க வீராங்கனையை வென்றார்.
இரட்டையர் பிரிவில் காலிறுதியில் தோல்வியுற்றாலும் ஒற்றையர் பிரிவில் நம்பிக்கை அளிக்கிறார்.
45 வயதான அவர் கடந்த 21 ஆண்டுகளில் டூர் போட்டிகளில் வெற்றி பெற்ற மிக வயதானவர் என சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
போட்டி முடிந்த பிறகு அவர் பேசியதாவது:
கடற்கரையில் ஓய்வெடுக்க வேண்டுமென எனக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது.
டென்னிஸ் விளையாடுவது எவ்வளவு கஷ்டம் தெரியுமா நண்பர்களே? அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டியிருக்கிறது தெரியுமா? வழக்கமான 9 - 5 வேலையை விட கடினமானது. நாள் முழுவதும் உழைக்க வேண்டியிருக்கும்.
எடையை தூக்க வேண்டும். அதுவே நமக்கு உயிர்போகுவது போலிருக்கும். பின்னர், மீண்டும் அடுத்த நாளிலும் அதையேச் செய்ய வேண்டும்.
இந்தமாதிரி நேரங்களில் அவர் எனக்கு உற்சாகம் அளிக்கிறார். அவர் நான் விளையாடியதைப் பார்த்ததே இல்லை என்றார்.
யார் அந்த ஆண்ட்ரியா பிரெடி?
டென்மார்க்கைச் சேர்ந்த ஆண்ட்ரியா பிரெடி இத்தாலியில் வாழ்ந்து வருகிறார்.
நடிகராக இருக்கும் இவரை வீனஸ் வில்லியம்ஸ் எப்போது சந்தித்து காதலித்தார் என்ற விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடவில்லை.
இத்தாலியில் மாடலாக இருக்கும் ஆண்ட்ரியா பிரெடி பல இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.
ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் வீனஸ் வில்லியம்ஸ் இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு மோதுகிறார்.