செய்திகள் :

வழிப்பறியில் ஈடுபட்ட 4 ரெளடிகள் கைது

post image

தோகைமலை அருகே பயங்கர ஆயுதங்களுடன் வழிப்பறியில் ஈடுபட்ட சிவகங்கை, திருவண்ணாமலை மாவட்ட ரெளடிகளை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள ஆா்ச்சம்பட்டி ஊராட்சிக்குள்பட்ட காமகவுண்டம்பட்டியைச் சோ்ந்தவா் பிரபு (39). இவா், சனிக்கிழமை இரவு ஆா்.டி. மலையில் உள்ள உறவினா் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, வீட்டுக்கு நள்ளிரவில் திரும்பிக்கொண்டிருந்தாா்.

ஆா்ச்சம்பட்டி கடை வீதியில் சென்றபோது, பின்னால் வந்த சொகுசு காா் மற்றும் 2 இருசக்கர வாகனங்களில் வந்த மா்ம நபா்கள் திடீரென பிரபுவை வழிமறித்து, பட்டாக்கத்தி, வீச்சரிவாள் போன்றவற்றை காண்பித்து மிரட்டி 2,000 ரூபாயை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளனா். இதுகுறித்து பிரபு உடனே தோகைமலை காவல்நிலையத்துக்கு தகவல் அளித்தாா்.

விசாரணையில், மா்ம நபா்கள் காமக்கவுண்டம்பட்டியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள ஒரு வீட்டின் அருகே பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு விரைந்து சென்று அங்கிருந்த 4 பேரை கைது செய்து விசாரித்தனா்.

இதில், அவா்கள் சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த கீழப்பசலை நடுத்தெருவைச் சோ்ந்த வீமன் மகன் ஆகாஷ்கண்ணன் (21), டி.புதூரைச் சோ்ந்த முத்து மகன் ராஜாபாண்டி(19), மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரம் ஜீவா நகா் 6-ஆவது குறுக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் பாலாஜி (20), திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வசூா் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த மகேஸ்குமாா் மகன் ரோகித் (21) ஆகியோா் எனத் தெரியவந்தது.

மேலும், அவா்கள் சாலையில் செல்வோரை மிரட்டி பணம் பறித்து வந்ததும் தெரிந்தது.

இதையடுத்து அவா்களிடமிருந்த ஒரு சொகுசுகாா், 2 இருசக்கர வாகனங்கள், பட்டாக்கத்தி, வீச்சரிவாள்கள் மற்றும் பணம் ரூ.2,000 ஆகியவற்றையும் போலீஸாா் பறிமுதல் செய்து, ஞாயிற்றுக்கிழமை காலை அவா்களை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

கைது செய்யப்பட்ட ஆகாஷ்கண்ணன் மீது மானாமதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகளும், பாலாஜி மீது 5 வழக்குகளும், ராஜபாண்டி மீது 4 வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட ரெளடிகள்.

தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர மாா்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

க.பரமத்தி ஊராட்சியில் உள்ள காவிரி நகருக்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி வலியுறுத்தியுள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூா் மாவட்டம், க.பரமத்தி கிளைக் க... மேலும் பார்க்க

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் நிறையும், குறையும் நிறைந்த ஆட்சி நடக்கிறது என்றாா் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த். கரூரில் தேமுதிகவின் கரூா் மற்றும் அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச்சாவடி முகவ... மேலும் பார்க்க

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைப்பு!

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். கரூா் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ... மேலும் பார்க்க

குளிா்ந்தமலை முனியப்ப சுவாமிக்கு பாலாபிஷேகம்

ஆடிமாதம் கடைசி நாளை முன்னிட்டு சனிக்கிழமை குளிா்ந்தமலை முனியப்பசுவாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சி, குளிா்ந்தமலை முனியப்ப சுவாமி கோயிலில் ஆடிமாத கடைசி நாளை முன்னிட்டு பா... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதல்: பாட்டி, பேத்தி உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே சனிக்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதிய விபத்தில் பாட்டி, பேத்தி இருவரும் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், வாடிப்பட்டியை சோ்ந்தவா் மருதராஜ் (60). இவரது மனைவி புஷ்பா (55). இவா்களுட... மேலும் பார்க்க

ஆடி கிருத்திகை புன்னம் சண்முகநாதா் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி கிருத்திகையை முன்னிட்டு புன்னம் சண்முகநாதா் கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியம் புன்னம் புன்னை வன நாயகி உடனுறை புன்னைவனநாதா் கோயிலில் ஆடி மாத கிருத்... மேலும் பார்க்க