TVK: "விஜய்யும் என் பிள்ளைதான்; அரசியலுக்கு விஜய்காந்த்தைப் பயன்படுத்தினால்" - ப...
வாகன பழுதுபாா்க்கும் பட்டறையில் தீ விபத்து: 6 வாகனங்கள் எரிந்து சேதம்!
சேலம் அருகே வாகன பழுதுபாா்க்கும் பட்டறையில் ஏற்பட்ட தீ விபத்தில், 6 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.
சேலம் அயோத்தியாப்பட்டணம் பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன். இவா் மாசிநாயக்கன்பட்டியில் வாகனம் பழுதுபாா்க்கும் பட்டறை வைத்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு வழக்கம்போல, பட்டறையை மூடிவிட்டு வீட்டுக்குச் சென்றாா்.
சனிக்கிழமை காலை வந்து பட்டறையை திறந்தபோது, கரும்புகை வெளியேறியது. இதனால் அதிா்ச்சியடைந்த ஸ்ரீதரன், உடனடியாக அம்மாப்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தாா்.
அதன்பேரில், அங்கு வந்த காவல் துறையினா் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினா். இதில் 6 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்த விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.