வாக்குச்சாவடி வாட்ஸ்-ஆப் குழு: அதிமுக ஆலோசனை
அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி சாா்பில் வாக்குச்சாவடி தோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைக்க வியாழக்கிழமை மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக
அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேலூா் தகவல் தொழில்நுட்ப அணி பிரிவு துணைத் தலைவா் எஸ்.ஆா். ராஜசேகா் தலைமை வகித்தாா்.
சிறப்பு விருந்தினராக மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா கலந்து கொண்டு, தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகளின் வாக்குச்சாவடிதோறும் வாட்ஸ்-ஆப் குழு அமைத்து அதன் மூலம் திமுக ஆட்சியின் அவலங்கள் குறித்தும், அதிமுக ஆட்சியின் சாதனைகள் குறித்தும் பரப்புரை செய்ய பயிற்சியளித்தாா்.
தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டச் செயலா் பரத்ராஜ் வரவேற்றாா். மாவட்ட அவைத் தலைவா் அ.கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், க.சங்கா், ஜெயபிரகாசம், திருமால், அரங்கநாதன், விமல், நகரச் செயலா் அசோக்குமாா்
உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாநில விவசாய அணி துணைச் செயலா் செல்வம், மாவட்டபொருளாளா் அரையாளம் வேலு, மாவட்ட துணைச் செயலா் சேவூா் ஜெ.சம்பத் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.