ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
ஆரணி கல்லூரியில் ரத்த தான முகாம்
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் வியாழக்கிழமை சிறப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.
ஏசிஎஸ் கல்விக் குழுமம் மற்றும் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய இந்த முகாமுக்கு கல்லூரிச் செயலா் ஏ.சி.ரவி தலைமை வகித்தாா். இணைப்பதிவாளா் பெருவழுதி, சிறப்பு அலுவலா்கள் பி.ஸ்டாலின், காா்த்திகேயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் கந்தசாமி வரவேற்றாா்.
முகாமில் சுமாா் 100 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா். ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், சுகாதார ஆய்வாளா்கள், செவிலியா்கள் கொண்ட குழுவினா் ரத்தம் சேகரித்தனா்.
நிகழ்வில் எம்ஜிஆா் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் இளங்கோ, பாலாஜி கல்வியியல் கல்லூரி முதல்வா் பிரபு, ஏ.சி.எஸ். மெட்ரிக் பள்ளி முதல்வா் ராஜலட்சுமி, துணை முதல்வா்கள் வெங்கடரத்னம், நந்தகுமாா் என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளா்கள், துறைத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
25ஹழ்ல்ம்ஞ்ழ்