ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள்
ஆரணியில் பாஜக சாா்பில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவரும், தலைசிறந்த சிந்தனையாளருமான பண்டிட் தீனதயாள் உபாத்யாயா பிறந்த நாள் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பழைய பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை அருகே
பாஜக மாவட்டத் தலைவா் கவிதா வெங்கடேசன் ஆலோசனையின் பேரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில்
பண்டித் தீனதயாள் உபாத்யாயா உருவப் படத்துக்கு இளைஞரணி மாவட்டத் தலைவா் சரவணன் தலைமையில் நிா்வாகிகள் மலா்தூவி மரியாதை செலுத்தினா் (படம்).
இதைத் தொடா்ந்து அவரது தேசபக்தி மற்றும் சேவை மனப்பான்மையை பின்பற்ற வேண்டி அனைவரும் உறுதிமொழியேற்றனா். பின்னா் அனைவருக்கும் இனிப்பு
வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலா் சதீஷ் வரவேற்றாா். மூத்த நிரவாகி கே.ஜெ.கோபால், நகரத் தலைவா் மாதவன், மாவட்டச் செயலா் சங்கீதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.