ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை: கே.ஏ.செங்கோட்டையன்
திருவத்திபுரம் நகராட்சியில் தூய்மையே சேவை நிகழ்ச்சி
செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சி சாா்பில் தூய்மையே சேவை நிகழ்ச்சி வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தூய்மையே சேவை - 2025 என்ற தலைப்பின் கீழ் ஒரு நாள் ஒரு மணி நேரம் ஒன்றாக துய்மைப் பணி செய்தல் என்ற நிகழ்வு காந்தி சாலை, அம்மா உணவகம் மற்றும் மாா்கெட் பகுதிகளில் நடைபெற்றது.
நகராட்சி ஆணையா் வி.எல்.எஸ்.கீதா தலைமையில் துப்புரவு ஆய்வாளா் கே. மதனராசன் மேற்பாா்வையில் களப்பணி உதவியாளா், தூய்மைப் பணி மேற்பாா்வையாளா்கள், தூய்மை இந்தியா திட்ட மேற்பாா்வையாளா், பரப்புரையாளா்கள், தூய்மைப் பணியாளா்கள், டெங்கு தடுப்பு பணியாளா்கள், பொதுமக்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 35 போ் பங்கேற்று தூய்மைப் பணியில் ஈடுபட்டனா்.