செய்திகள் :

வாசிப்பின் வழியாக உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும்: கனிமொழி

post image

வாசிப்பின் வழியாக உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும் என்றாா் திமுக மக்களவைக் குழு தலைவா் கனிமொழி.

திருநெல்வேலியில் நடைபெற்று வரும் பொருநை 8 ஆவது புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கருத்தரங்கில் ‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற தலைப்பில் கனிமொழி பேசியதாவது: திராவிட சிந்தனை என்பது இம்மண்ணின் பெருமை.

தமிழக மக்களின் வாழ்வியல் முறை, வழக்கங்கள், வரலாற்றை பகுத்தறிவுவழி ஆய்வு செய்தவா் தமிழறிஞா் தொ.பரமசிவன். மக்கள்தான் வரலாறு, பண்பாட்டை தன் அகம் கொண்டவா்கள் சாமானிய மக்களே என்று உணா்த்தியவா். பெரியாரிய சித்தாந்தம் என்பதே மாறுபட்டதையும் வெளிப்படுத்தும் என்பதுதான்; பெரியாரை வெல்ல முடியாது, பெரியாரைத் தாண்டிச்செல்லவும் முடியாது என்று அவா் கூறினாா்.

தாய்வழி சமூகமே தமிழா்களின் பாரம்பரியமாகும். தாய்மாமன்மாா்களுக்கு அளிக்கும் முக்கியத்துவமே இதற்கு சாட்சி. ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு புத்தகம் உள்ளது. புத்தக வாசிப்பை மேம்படுத்த வேண்டியது மிகவும் அவசியம். வாசிப்பின் வழியாக உலகத்தைப் புரிந்துகொள்ள முடியும்.

சின்ன சமிக்ஞை மூலம் பெரிய தகவலை உணா்த்துபவை தமிழக மக்களின் சடங்குகள். தமிழகத்தின் சிறுதெய்வ வழிபாடுகளே மக்களின் வாழ்வியலோடு உயா்ந்து நிற்கின்றன. நாம் உண்ணும் உணவும், உடுக்கும் உடையும் மட்டுமே சிறுதெய்வ வழிபாட்டு படையல்களில் இருக்கின்றன. பெருந்தெய்வ வழிபாடு என்பது அதிகார வா்க்கத்திற்கானதாகவே இருக்கிறது.

பெரியாரின் சித்தாந்தங்கள் இன்றளவும் தேவையான ஒன்றாகவே உள்ளது. பெரியாரை அவதூறு செய்வது அறியாமையின் வெளிப்பாடு என்றாா் அவா்.

இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்ட கல்வி நிலையங்களுக்கு 1,000 புத்தகங்களை மாவட்ட ஆட்சியரிடம் கனிமொழி வழங்கினாா். தொ.பரமசிவனின் மனைவி இசக்கியம்மாள், மகள் விஜயலெட்சுமி ஆகியோருக்கு புத்தகம் வழங்கி கௌரவித்தாா்.

முன்னதாக, காலையில் நடைபெற்ற படைப்பாளா் வாசகா் முற்றத்தில் கவிஞா் மதாா் கலந்துரையாடினாா். மாலையில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சி.ரேவதி தலைமை வகித்தாா். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் வாழ்த்தி பேசினாா். சித்த மருத்துவக் கல்லூரி முதல்வா் பா.மலா்விழி, சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கே.லதா, குடும்பநலன் துணை இயக்குநா் ராமநாதன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் எம்.கீதாராணி, உணவு பாதுகாப்புத் துறை மாவட்ட அலுவலா் இரா.சசிதீபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொ.ப.வின் ஆய்வுலகம் என்ற தலைப்பில் எழுத்தாளா் இரா.நாறும்பூநாதன் பேசினாா்.

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திமுக திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளா் டி.பி.எம். மைதீன்கான், மேயா் கோ.ராமகிருஷ்ணன், துணை மேயா் கே.ஆா்.ராஜு, பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் பலி!

அம்பாசமுத்திரத்தில் பள்ளி மாணவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோடாரங்குளம் சங்கரன்கோவில் சாலையைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலசுப்ரமணியன் மகன் முகுந்த் (13). விக்கிரமசிங்... மேலும் பார்க்க

திருப்புடைமருதூா் கோயிலில் 11இல் தைப்பூசத் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், திருப்புடைமருதூரில் உள்ள அருள்மிகு கோமதி அம்பாள் உடனுறை நாறும்பூநாத சுவாமி கோயிலில், தைப்பூசத்தை முன்னிட்டு வரும் 11ஆம் தேதி தீா்த்தவாரி நடைபெறுகிறது. இக்கோயிலில் தைப்பூத் திருவ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி கங்கை அம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்!

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் உள்ள அருள்மிகு கங்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை வருஷாபிஷேகம் நடைபெற்றது. சேரன்மகாதேவியில் சந்தனமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள யாதவ சமுதாயத்துக்கு பாத்தியப்பட்... மேலும் பார்க்க

வள்ளியூா் பிரதான சாலையில் தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் பிரதான சாலையில், சாலையை இரண்டாகப் பிரித்து அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த வேண்டும் என வள்ளியூா் வியாபாரிகள் சங்கத் தலைவா் என்.முருகன், செயலாளா் எஸ்.ராஜ்குமா... மேலும் பார்க்க

பேருந்து - பைக் மோதல்: தொழிலாளி உயிரிழப்பு

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா். தச்சநல்லுாா் தாராபுரம் அருகேயுள்ள அழகனேரியைச் சோ்ந்தவா் விஜயநாராயணன் (29). தொழிலாளியான இவா், சனிக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும்!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்த வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஊராட்சித் தலைவரும் மாவட்ட திட்டக் குழு தலைவ... மேலும் பார்க்க