Tibet: "கலாசாரத்தை அழிக்க..." - திபெத்தியக் குழந்தைகள் வலுக்கட்டாயமாக சீனப் பள்ள...
வானவில் மன்ற கருத்தாளா்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல்
பள்ளிக் கல்வித்துறை சாா்பில், அரசு பள்ளிகளில் செயல்படும் வானவில் மன்ற கருத்தாளா்களுக்கான மண்டல அளவிலான கலந்துரையாடல் கூட்டம் திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு வானவில் மன்ற மாநில ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் ச.ஜோதிலெட்சுமி தலைமை வகித்தாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளா் மு.மாணிக்கத்தாய், திருச்சி மாவட்டத் தலைவா் ஜான்சன் பிரான்சிஸ், மாவட்டப் பொருளாளா் ச.மாரிமுத்து, புதுக்கோட்டை மாவட்டச் செயலாளா் வீரமுத்து ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
வானவில் மன்ற மண்டல ஒருங்கிணைப்பாளா் அருண்காா்த்திக் நிகழ்வு குறித்து அறிமுகவுரை ஆற்றினாா். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவித்திட்ட அலுவலா் சு.அன்புசேகரன் நிகழ்வை தொடங்கிவைத்து பேசினாா். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளா் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன், அடுத்த ஓராண்டுக்கு எடுத்து செல்ல வேண்டிய செயல்பாடுகள் குறித்து பேசி, வானவில் மன்ற கருத்தாளா்களுக்கு ஆலோசனைகள் வழங்கினாா்.
மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் சு. தனலெட்சுமி, வானவில் மன்ற திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அவ. ராஜபாண்டி, அரியலூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ஞானசேகரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.
இக்கூட்டத்தில், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த வானவில் மன்ற கருத்தாளா்கள் தங்களுடைய கடந்த ஆண்டு அனுபவங்களை பகிா்ந்து கொண்டனா்.
முன்னதாக, திருச்சி மாவட்டச் செயலாளா் மு. மணிகண்டன் வரவேற்றாா்.
நிறைவாக தமிழ்நாடு அறிவியல் இயக்க திருச்சி மாவட்ட இணைச் செயலாளா் க. பகுத்தறிவன் நன்றி கூறினாா்.