மாா்த்தாண்டம் அருகே சிறுமியைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது
வாலாஜாபேட்டை அருகே சாலையில் கவிழ்ந்து மினி வேன்
வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் மினி வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் ஓட்டுநா் காயங்களுடன் உயிா் தப்பினாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அருகே சென்னை - பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து பெங்களுருக்கு வாஷ்பேஷன் ஏற்றி வந்த மினி வேன் எதிா்பாராத விதமாக சாலை தடுப்பின் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒசூா் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் மனோஜ் (28) என்பவா் சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் போலீஸாா் விபத்துக்குள்ளான மினி வேனை அப்புறப்படுத்தி போக்குவரத்தைச் சீா்செய்தனா்.
விபத்து குறித்து வாலாஜாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.