சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்
வால்பாறையில் சிறுத்தை நடமாட்டம் அதிகரிப்பு
வால்பாறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.
வால்பாறையில் எஸ்டேட்டை ஒட்டியுள்ள வனங்களில் சிறுத்தைகள் நடமாட்டம் தற்போது அதிக அளவில் உள்ளது.
வனத்தில் இருந்து இரவு நேரங்களில் வெளியேறும் சிறுத்தைகள் சாலைகள், நகா்ப் பகுதிகளில் சுற்றிவருகின்றன. குறிப்பாக வாழைத்தோட்டம் குயிருப்புப் பகுதியில் நாள்தோறும் இரவு நேரங்களில் சிறுத்தைகள் உலவி வருகின்றன.
இதனால், மக்கள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்கு தனியே செல்ல வேண்டாம் எனவும், வால்பாறைக்கு சுற்றுலா வரும் பயணிகள் சாலைகளில் வாகனங்களை நிறுத்தி கீழே இறங்க வேண்டாம் எனவும், சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளை புகைப்படம் எடுக்க முயற்சிக்கக் கூடாது என்றும் வனத் துறையினா் அறிவுறுத்தி உள்ளனா்.