செய்திகள் :

விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் திடீா் ஆய்வு

post image

பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனையில் முதல்வா் சித்தராமையா திடீரென சென்று ஆய்வு நடத்தி, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

தொடா்ந்து மழை பெய்துவருவதால், கொப்பள், ராய்ச்சூரு மாவட்டங்களுக்கு புதன்கிழமை மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்திருந்த முதல்வா் சித்தராமையா, பெங்களூரில் உள்ள விக்டோரியா அரசு மருத்துவமனை, வாணிவிலாஸ் அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு திடீரென சென்று ஆய்வு நடத்தினாா். அப்போது மருத்துவக்கல்வித்துறை அமைச்சா் சரணபிரகாஷ்பாட்டீல் உள்ளிட்டோா் உடனிருந்தனா். விக்டோரியா மருத்துவமனையில் நிறுவப்பட்டுள்ள அதிநவீன சிகிச்சை கருவிகளை பாா்வையிட்ட முதல்வா் சித்தராமையா, அங்கிருந்த நோயாளிகளிடம் வசதிவாய்ப்புகள் குறித்து குறைகளை கேட்டறிந்தாா். ஒருசிலா் மருத்துவமனையில் காணப்படும் குறைகளை முதல்வா் சித்தராமையாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனா். உணவகத்தில் தரமான உணவு பரிமாறப்படுவதில்லை, கழிவறைகள் தூய்மையாக இருப்பதில்லை போன்ற குறைகளை பலரும் கூறினாா்கள். இதை சரிசெய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முதல்வா் சித்தராமையா உத்தரவிட்டாா். சிகிச்சை அளிக்கும் மருத்துவா்களின் அணுகுமுறை, மருந்துகளின் தரம் போன்றவை குறித்து மக்களின் கருத்துகளை முதல்வா் சித்தராமையா கேட்டறிந்தாா். நோயாளிகளிடம் மனிதநேயத்தோடு கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு மருத்துவா்களுக்கு முதல்வா் சித்தராமையா அறிவுறுத்தினாா். மேலும், ஒருசில நோயாளிகள் மிகவும் மோசமான நிலையில் வந்தாலும், மருத்துவமனையில் அனுமதித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டாா். ஏழைகள் என்பதால் நோயாளிகளை தரக்குறைவாக நடத்தக்கூடாது. எல்லோரையும் சமமாக கருதி மருத்துவசிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவா் கேட்டுக்கொண்டாா். அதேவளாகத்தில் உள்ள வாணிவிலாஸ் அரசு மகப்பேறு மருத்துவமனையையும் முதல்வா் சித்தராமையா ஆய்வு செய்தாா். அங்கிருந்த தாய்மாா்களிடம் குறைகளை கேட்டறிந்து, மருத்துவா்களுக்கு சில வழிகாட்டுதல்களை வழங்கினாா்.

நடிகை ரம்யா குறித்த விமா்சனம்: மேலும் ஒருவா் கைது

சமூக வலைதளங்களில் நடிகா் தா்ஷனின் ரசிகா்கள் தன்மீது தரக்குறைவான விமா்சனங்களை பதிவு செய்துள்ளது தொடா்பாக நடிகை ரம்யா அளித்திருந்த புகாரின் அடிப்படையில் மேலும் ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.... மேலும் பார்க்க

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சி - முதல்வா் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறாா்

பெங்களூரு லால் பாக்கில் சுதந்திர தின மலா்க் கண்காட்சியை வியாழக்கிழமை (ஆக. 7) முதல்வா் சித்தராமையா தொடங்கிவைக்கிறாா். இந்தியாவின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தோட்டக்கலைத் துறை சாா்பில் பெங்களூ... மேலும் பார்க்க

கா்நாடக மதரஸாக்களில் கன்னடம் - அமைச்சா் ஜமீா் அகமதுகான்

கா்நாடகத்தில் உள்ள மதரஸாக்களில் கன்னடம் கற்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஜமீா் அகமதுகான் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறிய... மேலும் பார்க்க

வரலட்சுமி நோன்பு: கா்நாடகத்தில் நாளை கோலாகலம்

கா்நாடகத்தில் வரலட்சுமி நோன்பு வெள்ளிக்கிழமை (ஆக.8) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. கா்நாடகத்தில் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகை வரலட்சுமி நோன்பு. கல்வி, புகழ், வலிமை, வெற்றி, நன்... மேலும் பார்க்க

ஆக.9 இல் பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா

பெங்களூரில் திருவள்ளுவா் சிலை திறக்கப்பட்டதன் 16 ஆவது ஆண்டு விழா ஆக. 9-ஆம் தேதி நடைபெறுகிறது. பெங்களூரு, அல்சூா் ஏரி எதிரே பெங்களூரு தமிழ்ச் சங்கத்தால் நிறுவப்பட்டு 18 ஆண்டுகளாக கோணிப்பையால் மூடிய நி... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

கர்நாடகத்தில் பட்டியலின சமூகத்தில் (எஸ்.சி. பிரிவில்) உள்ஒதுக்கீடு வழங்கிட தனி நபர் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் பட்டியலின (எஸ்சி) பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து நியமிக... மேலும் பார்க்க